search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் டிரைவர்"

    • கதவை உள் தாழிட்டு சமையல் செய்வதற்காக சரஸ்வதி விறகு அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக தீப்பொறி வீட்டின் குடிசை பகுதியில் பற்றி கொண்டது.
    • அரசு பஸ் டிரைவர் மனோகரனை பொதுமக்கள் பாராட்டினர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கொளநால்லி அடுத்துள்ள கருங்கரடு பகுதியை சேர்ந்தவர் சம்பூர்ணம் (59). தனது தாயார் சரஸ்வதி (82) என்பவருடன் குடிசை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று காலை சம்பூர்ணம் விவசாயக் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். அவரது தாய் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    கதவை உள் தாழிட்டு சமையல் செய்வதற்காக சரஸ்வதி விறகு அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக தீப்பொறி வீட்டின் குடிசை பகுதியில் பற்றி கொண்டது.

    பின்னர் சிறிது நேரத்தில் தீ மலமலவென்ன குடிசையில் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் வீட்டுக்குள் புகை மண்டலமாக காட்சியளித்தது. சரஸ்வதியால் உடனடியாக வெளியேற முடியவில்லை.

    அப்போது ஈரோட்டில் இருந்து கொடுமுடி நோக்கி 43-ம் நம்பர் அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை மனோகரன் என்பவர் ஓட்டி வந்தார். பின்னர் மூதாட்டி வீட்டில் தீ எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனோகரன் உடனடியாக பஸ்சை நிறுத்தி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சரஸ்வதியை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார். இதனால் மூதாட்டி சரஸ்வதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இது குறித்து மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    எனினும் இந்த தீ விபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் எரிந்து சேதமானது.

    உரிய நேரத்தில் சமயோதிகமாக செயல்பட்டு மூதாட்டியை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர் மனோகரனை பொதுமக்கள் பாராட்டினர்.

    இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகன் என்பவர் அகரம்பள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் இறங்கியபோது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
    • தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள செடிகளில் சிக்கி இருந்த முருகனின் உடலை மூங்கில்துறைப்பட்டு போலீ–சார் மீட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப் பட்டு பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் மகன் முருகன் (45). அரசு பஸ் டிரைவர். இவர் அகரம்பள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் இறங்கியபோது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதையறிந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தென்பெண்ணை ஆற்றில் இறங்கி முருகனை தேடி னார்கள். ஆனால் அவரை காணவில்லை. ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முருகனின் நிலை என்ன? அவா் என்ன ஆனார்? என்று தெரியா மல் வாணாபுரம் மற்றும் மணலூர்பேட்டை போலீ சாரும், தீயணைப்புதுறை யினரும் முருகனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மூங்கில் துறைபட்டை அடுத்த சுத்த–மலை தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள செடிகளில் சிக்கி இருந்த முருகனின் உடலை மூங்கில்துறைப்பட்டு போலீ–சார் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே தனியார் பஸ் டிரைவரை வழிமறித்து தாக்கிய 6 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
    • டிரைவர் மணிவண்ணனை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    புதுச்சேரியில் இருந்து பாகூருக்கு தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி பெரிய காட்டுப்பாளையம் பகுதியில் சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென்று நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி வீண் தகராறு செய்து அதில் இருந்த டிரைவர் மணிவண்ணனை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் பெரிய காட்டு பாளையம் சேர்ந்தவர்கள் பசுபதி, ராகுல் தமிழரசன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    48 மாணவர்கள் பஸ்சில் இருக்க சாலையில் ஆர்டிஓ அதிகாரிகள் நிற்பதை கண்ட டிரைவர், பஸ்ஸை நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஓட்டமெடுத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள நாதபுரம் என்ற பகுதியில் கடந்த வாரம் 48 பள்ளி மாணவர்கள் சென்ற பஸ்சின் டிரைவர் சாலை ஓரம், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நிற்பதை கண்டுள்ளார். உடனே, பஸ்சை நிறுத்தி விட்டு மாணவர்களை அப்படியே தவிக்க விட்டு அங்கிருந்து ஓட்டமெடுத்துள்ளார்.

    இதனை அடுத்து, பேருந்தில் இருந்த மாணவர்களை ஆர்டிஓ அதிகாரிகள் வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்துவிட்டு பஸ்சை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பள்ளி நிர்வாகிகள் வந்து பேசிப்பார்த்தும், டிரைவர் வந்தால்தான் பஸ்சை திருப்பி ஒப்படைக்க முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    17 பேர் செல்லக்கூடிய சிறிய பஸ்சில் 48 மாணவர்கள் இருந்துள்ளனர். இதனால், அதிகாரிகளை கண்டு பயந்த அந்த டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு ஓடியதாக தெரியவந்துள்ளது. 
    ×